Thursday 13 September 2018

இலங்கைக்கு 160 புகையிரதங்களை இந்தியா வழங்கும்

இலங்கை அரசாங்கத்துக்கு 160 புகையிரதங்களை இந்தியா தயாரித்து வழங்கவுள்ளது. இதற்காக 82 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியிலான ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. 

இலங்கைக்காக ஏற்கனவே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியிலான பங்களிப்பை புகையிரதத்துறைக்கு இந்தியா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கடந்த வருடம் இந்தியாவின் EXIM வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 318 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான கடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு புகையிரதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் புகையிரதப் பாதைகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. 

தற்போதைய 160 புகையிரதங்களை கொள்வனவு செய்யும் பெறுமதியும் மேற்படி கடன் ஒப்பந்தத்தில் உள்ளடங்கும். இது இலங்கை புகையிரத சேவைகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment